திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅதிமுக மாணவர் அணி சார்பில் பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅதிமுக மாணவர் அணி சார்பில் பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாக
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். பொன்மலை மேல கல்கண்டார்கோட்டையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கரூர்சின்னசாமி,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி தலைமையேற்றார்.
கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட, வார்டு, சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்