திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு மாநில பார்வையாளர்களாக  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை புஷ்பராஜ் மாநில செயலாளர் சேலம் சரவணன் வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது இந்தக் குழு கலந்து கொண்ட திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார நகர பேரூர் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாசலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி .கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் அடங்கியுள்ள திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய கிராம கமிட்டிகள் மற்றும் பூத் கமிட்டிகளை சீரமைத்து தருவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் திருவெறும்பூர் வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார் ரகுவரன் அந்தநல்லூர் வட்டார தலைவர்கள் கனகராஜ் கிருஷ்ணமூர்த்தி மணிகண்டம் வட்டார தலைவர்கள் கே. எஸ். சுந்தரம் கருணாகரன் மணப்பாறை வட்டார தலைவர்கள் சத்தியசீலன் சிவ சண்முகம் வையம்பட்டி வட்டார தலைவர்கள் செல்வம் ராதாகிருஷ்ணன் மருங்காபுரி வட்டார தலைவர் குழந்தை தமிழரசன் நகரத் தலைவர்கள் மணப்பாறை செல்வா துவாக்குடி ஆனந்தன் பேரூர் கமிட்டி தலைவர்கள் கூத்தை ப்பார் அருணாச்சலம் பொன்னம்பட்டி பொன்னுச்சாமி சிறுகமணி கே ஆர் ராஜா மாவட்ட பொது செயலாளர்கள் அர்ஜுன் யுவன் மாவட்ட துணை தலைவர் எழிலரசன் செயலாளர் வீரபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மணப்பாறை நஜீம் இளைஞர் காங்கிரஸ் தினேஷ் ஐ என் டி யு சி தலைவர்கள் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்