திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சமயபுரம் டோல்கேட்டில் மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், ராஜா, வட்டார தலைவர்கள் மாணிக்கம், சுப்பிரமணி ,சபாபதி, பிரபு, ஆனந்தபாபு, ரவிச்சந்திரன். நல்லேந்திரன், சுந்தர்ராஜ், சாந்தகுமார், சேகர், விஜயலட்சுமி தமிழ்ச்செல்வி ஃபெமிலா விஜயகுமார் ராணி பரமேஸ்வரி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்