திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு. இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில்
வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு. இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 வந்தே பாரத் ரயில்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அதில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் மாலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது..இதை எடுத்து அங்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
பின்னர் வந்தேபாரத் ரயிலை வரவேற்று பூத்தூவி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில்
மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன்,
பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் எஸ்.கே.பேட்ரோ, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜேக்கப்,
செய்தி தொடர்பாளர் தன்ராஜ்,
மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ஜான் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் செல்வி , கிழக்கு தொகுதி செயலாளர் கனகராஜ் , மேற்கு தொகுதி செயலாளர் ஜேம்ஸ், பகுதி செயலாளர்கள் ஜேம்ஸ், லூர்துராஜ்,
வட்ட செயலர்கள் ஜெரால்ட், பெல்லார்மின், மணி, நெல்சன்,
மகளிரணி, அனைத்து நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர் லூயிஸ், மத்திய மாவட்ட செயலாளர் தேவராஜ்.
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.