தூய்மை நகரங்களில் தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு.

தூய்மை நகரங்களில் தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் தூய்மை நகரங்கள் விருது மாண்புமிகு மேயர் அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு .இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., ஆகியோருக்கு டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் தலைமையில் தூய்மை நகரங்களுக்கு விருது வழங்கும் விழாவில் இன்று11.01.2024 நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் திரு. மனோஜ் ஜோசி அவர்கள் விருது வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தில்லியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறம் மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் ஜனாதிபதி தரவுபதி அவர்கள் தலைமையில் தூய்மை நகரங்கள் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது

ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு கான தூய்மை நகரங்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது தேசிய அளவில் 446 நகரங்களும் தமிழக அளவில் 29 நகரங்களும் கணக்கெடுப்பில் பங்கேற்றன தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் 112 வது இடத்தை மாநில அளவில் முதலிடத்தையும் திருச்சி மாநகராட்சிபெற்றுள்ளது இதற்கான விருதுகளை துறை செயலாளர் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ,ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப., ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நீர் நிலைகளை தூய்மையாக பராமரித்தல் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்தல், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்தல், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குப்பை கிடங்குகளை முறையாக பராமரித்து ஆகிய பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் மொத்தம் 5 ஆயிரத்து 795 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்