திருச்சி மாநகராட்சி 5 -வது மண்டலத்தின் வார்டு குழு கூட்டம். மண்டலக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி 5 -வது மண்டலத்தின் வார்டு குழு கூட்டம். மண்டலக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தின் வார்டு குழு கூட்டம் மண்டல அலுவலகத்தில் அதன் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. உதவி ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெறுகின்ற பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி, தார்ச்சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தெருக்களில் ஆங்காங்கே சுற்றித் திரிகின்ற நாய்களை விரைவாக பிடிக்க வேண்டும் என்றும் ஒரு மனதாக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்
இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் விஜயாஜெயராஜ், விஜயலட்சுமி, சோபியாவிமலா ராணி,கமால் முஸ்தபா, பைஸ் அகமது, சுரேஷ்,
செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம்,சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட், இளநிலை பொறியாளர் ரமேஷ், பிரசாந்த், ரவிக்குமார், நிர்வாக அலுவலர் துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.