எகிப்து நாட்டில் நடந்த டிரையத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என்ற திருச்சி கல்லூரி மாணவர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

எகிப்து நாட்டில் நடந்த டிரையத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என்ற திருச்சி கல்லூரி மாணவர்

ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

எகிப்துநாட்டில் சர்வதேச தடகளப்போட்டி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட 32 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 19 வயதுக்குட்பட்ட டிரையத்லான் (நீச்சல், ஓட்டம், சைக்கிளிங்) போட்டியில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ரூயல்ஆர்தடர்ன் கலந்து கொண்டார். இதேபோட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 58 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட ரூயல்ஆர்தடர்ன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தநிலையில் நாடு திரும்பிய ரூயல்ஆர்தடர்னுக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம்,புதிய ஜெருசேலம் தேவாலயம் பிஷப் பால்,மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்