காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகரகாவல் துணை ஆணையர் முதலிடம்.

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகரகாவல் துணை ஆணையர் முதலிடம்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிக்கான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16 தேதிகளில் நடைபெற்றது.

இந்த போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் (டிஎஸ்பி முதல் ஐஜி வரை) பலரும் பங்கேற்றனர். இதில், ஒட்டுமொத்த போட்டியில் திருச்சி மாநகர காவல்துறை (வடக்கு மண்டல) துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா முதல் பரிசை தட்டிச்சென்றார்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன் 2 ஆவது இடத்தையும், திருவெறும்பூர் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.
மேலும் ரைபிள் பிரிவில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் க. கார்த்திகேயன் முதலிடத்தையும், அரியலூர் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் 2 ஆவது இடத்தையும், அரியலூர் கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அந்தோனிஹரி 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.
அதேபோல பிஸ்டல் பிரிவில் திருவெறும்பூர் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் முதலிடத்தையும், திருச்சி மாநகர (வடக்கு மண்டல) துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா 2 ஆவது இடத்தையும், ஒரத்தநாடு உள் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஷக்னாஸ் 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். காவல்துறைத் தலைவர் கார்த்திகேயனுக்கு துணைத் தலைவர் எம். மனோகரன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்