திருச்சி அந்தநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சூறை காற்று வீசியதில் ஆயிரகணக்கான வாழைகள் ஒடிந்து நாசம்.
திருச்சி அந்தநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சூறை காற்று வீசியதில் ஆயிரகணக்கான வாழைகள் ஒடிந்து நாசம்.
கடந்த 10−மாத காலமாக மழை இல்லாமல்,கால்வாய்களில் தண்ணீரும் கிடைக்காமல் அந்தநல்லூா் ஒன்றிய பகுதிகளில் பெட்டவாய்தலை ,பெருகமணி,சிறுகமணி,
திருப்பராய்துறை, அணலை, கொடியாலம்,புலிவலம் பகுதிகளில் பல ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களில் ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் போதிய தண்ணீா் இல்லாமல் கருகி விடும் நிலையிலும், பூவும் பிஞ்சுமாய்,அரைகுறை விளைச்சளோடு கருகி வந்ததை கடந்த 08−05−2014, அன்று வணக்கத்திற்க்குறிய திருச்சி மாவட்ட ஆட்சியா் அவா்கள் கவணத்திற்க்கு கொன்டு சென்றதில் தோட்டகலைதுறை மற்றும் வருவாய்துறை மூலம் கணக்கெடுப்பு எடுக்க சொல்லியிருந்த நிலையில், நேற்று 10−05−2024 மாலை இப் பகுதியில் சூறை காற்றுடன் மழைபெய்ததில் 10−நிமிட நேர மட்டுமே வீசிய”சூறை காற்றில் பல ஆயிரகணக்கான வாழைகள் ஒடிந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
தண்ணீா் இல்லாமல் வாடி வதங்கி கருகும் நிலையில் உள்ள வாழைகளையும்,சூறை காற்றில் ஒடிந்த வாழைகளையும் சாியாக கணக்கெடுதத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேன்டும் என்று
தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் ,
மாநில நிா்வாக குழு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.