நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநகர பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர்.

நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநகர பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர்.

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் புதிய மாநகரப் பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள குத்தைப் பார் பேரூராட்சி பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக குத்தைபார் பேரூராட்சி வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி கோரிக்கை விடுத்தனர் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக கூத்தைப்பாறை நோக்கி புதிய மாநகர பேருந்தை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாவட்ட குழு துணை தலைவரும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல் போக்குவரத்து கழக அதிகாரிகள் பொது மேலாளர் சக்திவேல்,
கோட்ட மேலாளர் புகழேந்திராஜ்,
கிளை மேலாளர்
பால் கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்