மதுவை ஒழிக்க அரசு நடவடிக்கை வக்பு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும், திருச்சியில் நடந்த மாநில உலமாக்கள் மாநாட்டில் தீர்மானம்.
மதுவை ஒழிக்க அரசு நடவடிக்கை வக்பு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும், திருச்சியில் நடந்த மாநில உலமாக்கள் மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு, புதுச்சேரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில்
மாநில அளவிலான உலமா பெருமக்கள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டை மௌலவி கபீர் உமரி
திருக்குர்ஆன் வசனங்களை ஓதி
துவக்கி வைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மாநிலத் தலைவர் மௌலவி .முஹம்மது ஹனீபா மன்பயீ “தலைமையுரை” ஆற்றினார்.
மாநிலச் செயலாளர் (உலமா பிரிவு) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி வரவேற்று பேசினார்.
தாருஸ்ஸலாஹ் உயர் கல்வியகம் முதல்வர் மௌலவி மு.ஷேக் அப்துல் காதிர் காஷிஃபி,காஸிமி ,
மௌலவி R.காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி, இஸ்லாமிய கல்லூரி தாளாளர்
மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ,அரபிக் கல்லூரி பேராசிரியர்
மௌலவி ஹாபிழ் பாஜில்செய்யது இப்ராஹிம் அன்வாரி ,திருச்சி இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர்
மௌலவி நூஹ் மஹ்ழரி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
முடிவில் மௌலவி அப்துல் ஹஸீப் பாகவி,ஃபாஜில்,தேவ்பந்த் நன்றி கூறினார். மாநாட்டு அமைப்பாளர்
மௌலவி நாசர் புகாரி மாநாட்டை வழி நடத்தினார். மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உலமாக்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.
இம்மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட
உலமாக்கள் கலந்து கொண்டார்கள். மாநாட்டில்,தமிழகத்தில் முற்றிலும் மதுவை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வக்பு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச் சுதந்திரம்,வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.