திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி தினேஷ்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி தினேஷ்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திலீபன் ரமேஷ் அக்கா மகனும்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் தீனாவின் சகோதரருமான ,41 வது வார்டு செயலாளர் தினேஷ்குமார் நேற்று இரவு திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகில் சென்டர் மீடியாவில் இருந்து சாலையை கடக்க முயன்ற போது அங்கிருந்த போஸ்ட் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி உயிர் இறந்தார்.

தொடர்ந்து அவரது உடல் துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரதேபரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய இறப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் கோரிக்கை ஏற்கப்படாததால் துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு கட்சியினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சி ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர்சித்திக், ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தமிழாதன், தங்கதுரை, மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், வழக்கறிஞர் கலைச்செல்வன், சக்திஆற்றல்அரசு, வழக்கறிஞர்கள் பழனியப்பன், சதீஷ், குணா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததை அடுத்து தினேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இறந்த தினேஷ்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் அவர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது உடலுக்கு உறவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திருவரம்பூர் அருகில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

திருமணமாகி ஒரு வருடமே ஆன தினேஷ்குமாருக்கு மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் வளைகாப்பு விழா நடைபெற்று இன்னும் சிறிது நாட்களில் குழந்தை பிறக்கும் நிலையில் தினேஷ்குமார் மரணம் அவர்கள் குடும்பத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்