பில்கிஸ் பானு விவகாரம். நம்பிக்கை தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!
பில்கிஸ் பானு விவகாரம். நம்பிக்கை தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறையின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் மார்ச் 3-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர் . அத்துடன் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு தொடரப்பான வழக்குகளே பில்கிஸ் பானு வழக்கு என்று அழைக்கப்படுகின்றன.
2002 குஜராத் கலவரத்தின் போது பில்கீஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொடூரமாக கொலை செய்த கொடூர மனிதமிருகங்களை குஜராத் நீதி மன்றம் விடுவித்தது. சிறையில் இருந்து இந்த காமக்கொடூரன்கள் வெளிவந்த போது இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கொடூர சம்பவமும் நடந்துள்ளது.
பின்னர் தொடரப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளையும் குஜராத் நீதிமன்றம் விடுவித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மீண்டும் சிறைக்குச் செல்லும் கொடூர குற்றவாளிகள்
கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உட்பட 14 பேரை துடிக்க துடிக்க கொலை செய்த குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை,
சட்டமன்றத் தேர்தல் ஓட்டுக்காக சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர்
இந்த தீர்ப்பின் மூலம் சாமானிய மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.