தென் தமிழகம் பாலைவனம் ஆகும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் எச்சரிக்கை.

 

தென் தமிழகம் பாலைவனம் ஆகும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் எச்சரிக்கை.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியிருப்பதாவது,

தென் தமிழகத்தில்,

விரைவில் குடிக்க தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் 2000 அடிக்கு கீழே செல்லும் நிலையும், கனிமவளம் அறவே அற்ற பகுதியாகவும் மாறும் என்பது திண்ணம்.

புனலூரில் இருந்து புளியரை வரை நான் வந்த இந்த நேரத்தில்,  68 ராட்சத வண்டிகளில் கனிம வளங்கள் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது…

இந்தக் கொள்ளை கும்பலுக்கு இரவும் கிடையாது பகலும் கிடையாது.

அரசாங்கம் ஒட்டுமொத்தமாக இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அரசின் கொள்கை முடிவு என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு வழக்கறிஞர் கூறிய நிலையில்,

நடக்கும் கனிம வள கொள்ளையை பார்த்தால் தென் தமிழகம் அடுத்த பத்தாண்டுகளில் பாலைவனம் ஆகலாம்.

ஒரு அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றாக தடை செய்கிறோம். என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினால் நீதிமன்றங்கள் கூட அதைக் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்படும்.

இதைச் செய்யுமா அரசு என்று அன்வர் பாலசிங்கம் தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்