திருச்சி மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் தமிழ் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். பொருளாளர் இஸ்மாயில் சேட் மற்றும் மாநில துணைத்தலைவர்கள் என்.டி.கந்தன், ரங்கநாயகி பட்டாணி தென்னூர் சரவணன், துவாக்குடி எம்கே சாகுல் ஹமீது, மாநில இணைச்செயலாளர்கள் மார்க்கெட் எம்.இ. சபி முகமது, மாரி என்கிற பத்மநாபன், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ். எம். டி. சபி, முரளி, நடராஜன், முஸ்தபா, திரைப்படம் ரங்கராஜ், டூவீலர் அசோசியேஷன் சேகர் மற்றும் திருச்சி கோபால் பாலாஜி, காட்டூர் அப்துல்லா, பேரவை பிரதிநிதி குமார்,ஸ்ரீரங்கம் செல்வம்,இளைஞர் அணி பிரபாகரன், முகமது மைதீன், ஜிம் விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் காந்தி மார்க்கெட் புஷ்ப கமிஷன் மண்டி தலைவர் ஏ. குத்புதீன் மாவட்ட துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். கூட்டத்தில்,
அரசுக்கு முறையாக ஜி.எஸ்.டி., தொழில் வரி,வருமான வரி, தொழில் உரிமம், உணவு பாதுகாப்பு வரி,பணியாளர்கள் வரி, முத்திரை வரி இன்னும் பல்வேறு வரிகளை கட்டிக் கொண்டும், கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வணிகத்தோடு போராடி வியாபாரம் செய்து வரும் வணிகர்களை மேலும் நசுக்கும் வகையில் தொழில் உரிமத்தை முறையாக நிர்ணயம் செய்யாமல் அதிக வரி போட்டு அதிகாரிகள் கட்டச் சொல்லி நிர்பந்தப்படுத்துவதும் கவலை அளிக்கிறது. திருச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் தினசரி காய்கறி சந்தைகளை கட்டவிழ்த்து விடுவதால் முறையாக வரிக்கட்டும் வணிகர்களின் வணிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக பலமுறை கலெக்டர் ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளிக்கப்படும் நடவடிக்கை எடுக்காததால் விரைவில் திருச்சி மாவட்டத்தின் சார்பில் கருப்புக் கொடி அணிந்து மாநகராட்சி முற்றுகை போராட்டம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.