சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்.
சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பேரூராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், டிராக்டர் மற்றும் பேட்டரி வண்டிகள் மூலம் சேரன்மகாதேவி ரவுண்டானா அருகில் உள்ள உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வந்தது.
இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் இருந்த உரக்கிடங்கு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சாலை விரிவாக்கப்பணி முடிந்ததும் முன்னால் இருந்ததை விட சிறிய அளவில் உரக்கிடங்கு கட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது சேரன்மகாதேவி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் கொழுந்துமாமலையடிவாரத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வனவிலங்குகளான மான், மிளா, முயல் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.