சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம்.
சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள்
தென்காசி துயரம்.
தென்காசி மாவட்டம் புளியறையில் தட்சிணாமூர்த்தி நகர் உள்ளது. ஏறக்குறைய 200 குடும்பங்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர்.
மழை பெய்து விட்டால் மனிதர்கள் நடமாட முடியாத நிலைக்கு இந்தப் பகுதியில் உள்ள தெருக்கள் உள்ளது. மழைநீரோடு கழிவு நீரும் கலந்து சாலைகளில் ஓடுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் செய்ய பொதுமக்களும் எங்கும் இதனால் செல்ல முடியவில்லை. சாக்கடையிலும், சகதியிலும் அதில் வரும் புழுக்களோடும் தான் இங்குள்ள மக்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட நிர்வாகமாவது அல்லது செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளாவது கவனத்தில் கொண்டு மக்கள் படும் துயரத்துக்கு விடிவை கொடுக்க வேண்டும்.