குத்துக்கல்வலசை ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம், இருவர் சிறையில் அடைப்பு.
தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் கொல்லத்தை சோ்ந்தவா் ரெஜினிஸ் பாபு(44).இவரது உறவினா் வந்தனா அமெரிக்காவில் வசித்து வருகிறாா். இவருக்காக குத்துக்கல்வலசை ராஜாநகா் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி கோரி, ஊராட்சி அலுவலகத்தில் ரெஜினிஸ்பாபு விண்ணப்பித்துள்ளாா்.
அவரிடம், வரைபட அனுமதிக்கான அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.59,290 மற்றும் லஞ்சமாக ரூ.46 ஆயிரம் (2 சதவீதம்) வேண்டும் என்று ஊராட்சித் தலைவா் சத்தியராஜ் கேட்டதாக சொல்லப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரெஜினிஸ் பாபு தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் செய்தாா். போலீஸாா் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ. 46 ஆயிரத்துக்கான நோட்டுகளை, ஊராட்சித் தலைவரிடம் அவா் கொடுத்துள்ளாா்.
அந்த பணத்தில் 40,000 மட்டும் போது மீதி ஆறாயிரம் வேண்டாம். நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னதோடு, அந்த பணத்தை அங்கிருந்த ஒப்பந்ததாரா் செளந்தராஜனிடம் கொடுக்குமாறு ஊராட்சித் தலைவர் கூறினாராம். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி அடங்கிய குழுவினா் ஊராட்சித் தலைவரையும், ஒப்பந்ததாரா் செளந்தரராஜனையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.