திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.  ஏராளமானவர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.  ஏராளமானவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு திருச்சி மாவட்டம் (டிட்டோஜேக் ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அருகில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வர்ட் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், ஜே எஸ் ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் வரவேற்பு பேசினார். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் மற்றும் டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.உண்ணாவிரதத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர் வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறைதொடர்பான ஆணைகளைஉடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர் மாலையில் உண்ணாவிரதத்தை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்துசாமிமுடித்து வைக்கிறார் உண்ணாவிரதத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்