திருச்சி தமிழ் சங்கத்தில் முஸ்லிம் இலக்கிய மன்ற ஆலோசனைக் கூட்டம். நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி தமிழ் சங்கத்தில் முஸ்லிம் இலக்கிய மன்ற ஆலோசனைக் கூட்டம். நிர்வாகிகள் பங்கேற்பு.
முஸ்லிம் இலக்கிய மன்ற 108 – ம் ஆண்டு துவக்க விழா ஆலோசனக் கூட்டம் மற்றும் சிறப்புப் பட்டிமன்றம் திருச்சி தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது. மன்றதலைவர் உமர் இக்பால் தலைமை தங்கினார். பொதுச் செயலாளர் கவிஞர் சையது ஜாபர் வரவேற்று பேசினார். துணைத்தலைவர்கள் டாக்டர் எம்.ஏ.அலீம், முஹம்மது ஜாக்கிரியா, இணைச் செயலாளர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழசங்க செயலாளர் உதயகுமார், அல் இஸ்லாம் கல்லூரி தாளாளர் மொய்தீன், ஜான்பால் உரையாடல் மன்ற இயக்குனர் அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் இன்றைய இளைஞர்கள் திசைகாட்டும் கருவிகளா? திசைமாறிய பறவைகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. கவிஞர் நந்தாலாலா நடுவராகவும், நீலகண்டன். பாஸ்கர் அன்னலட்சுமி கிலோமணி ஆகியோர் பட்டிமன்றதில் கலந்துகொண்டு பேசினர். முடிவில் இணைச் செயலாளர் சையத் ஜாகீர் ஹசன் நன்றி கூறினார்.