சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சாலை பயண பாதுகாப்பு பற்றிய கலை நிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சத்தியம் அறக்கட்டளை இணைந்து நடத்திய பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின்
தலைவர் சிவசங்கர்சேகரன் வரவேற்றார். விழாவில் சத்தியம் அறக்கட்டளை நிறுவனர் அமாவாசை முன்னிலை வகித்தார். கண்டோண்ட்மெண்ட் காவல்உதவி ஆணையர் கென்னடி கலந்துகொண்டு
சாலை பயண பாதுகாப்பு பற்றிய நோட்டீஸ்களை
மேயருடன் சென்று பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் ,சர்புதீன்,
அமிர்தம் விஜயகுமார்,
டிராபிக் வார்டன் பிரசிடெண்ட்
எழில்ஏழுமலை, மணோகரன்,
மோகன்,சதீஷ், ஆ.ராஜன், அனுசுயா, பிரேம்குமார்,முல்லை எஸ்றா, மற்றும் பலர் கலந்துகொண்டு பிரச்சார நோட்டீசை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். முடிவில் ஜீலியா,
நன்றி கூறினார்.