கோழி மேய்ந்த தகராறில் தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை: தந்தை – மகன் வெறிச்செயல்!
கோழி மேய்ந்த தகராறில் தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை: தந்தை – மகன் வெறிச்செயல்!

தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன் மடம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தவமணி மகன் சம்பத் செல்வகுமார் (60). இவர்களது எதிர்வீட்டில் வசிக்கும் ராமசாமி மகன் ஜெயபாண்டி (67) என்பவரது வீட்டில் வளர்க்கும் கோழி இவரது தோட்டத்தில் மேய்ந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபாண்டி மற்றும் அவரது மகன் மாரிமுத்து (36) ஆகிய இருவரும் சேர்ந்து சம்பத் செல்வகுமாரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சாயர்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து தந்தை – மகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது