திருச்சி மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும். கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மனு.
திருச்சி மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும். கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மனு.
திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதுமாக. அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. அதற்கு அரசு நேரம் கொடுத்துள்ளது. அரசு மதுபான கடையில் பார் நடைபெற்று வருகிறது. ஆனால் திருச்சி மாநகரில் உள்ள மதுபான கடைகளில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மதுபானம் விற்கப்படுகிறது. இது குறித்து. பலமுறைமாவட்ட ஆட்சித் தலைவர். அலுவலகத்தில்மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர். பி.கே.திலிப் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மீண்டும் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பு செயலாளர் வி.எழிலரசன். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர். எஸ்.கே.ஜே. ரபிக். திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர். பா.செந்தில் குமார். மாவட்ட பொறுப்பாளர் பி.கே.ஆனந்த். மலைக்கோட்டை பகுதி செயலாளர். வீரமணி. மலைக்கோட்டை பகுதி அமைப்புச் செயலாளர். செந்தில்குமார். தாராநல்லூர் பகுதி தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.