காப்பகத்தில் வைக்கப்பட்ட கடையநல்லூர் பள்ளிவாசல் யானை… வறுமையில் வாடிய யானை பாகன்… உதவிக்கரம் நீட்டிய அதிமுக எம்எல்ஏ.
காப்பகத்தில் வைக்கப்பட்ட கடையநல்லூர் பள்ளிவாசல் யானை… வறுமையில் வாடிய யானை பாகன்… உதவிக்கரம் நீட்டிய அதிமுக எம்எல்ஏ.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
யானை பாகன் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாகவும், தனக்கு சாப்பாட்டிற்குகூட வழியில்லை என்றும் மனு அளித்ததை தொடர்ந்து,
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகன் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் யானை வந்துவிடும் என்றும் தைரியம் வழங்கினார்…
இந்நிகழ்வின் போது நகர கழக செயலாளர் திரு.எம்.கே.முருகன், முன்னாள் நகர கழக செயலாளர் திரு.கிட்டுராஜா உள்ளிட்ட கடையநல்லூர் நகர அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்…