புத்தகங்களை தொட்டுப் பார்த்தால் காகிதம், தொடர்ந்து வாசித்தால் அது ஆயுதம். திருச்சியில் ராணுவ விஞ்ஞானி பேச்சு.

புத்தகங்களை தொட்டுப் பார்த்தால் காகிதம்,
தொடர்ந்து வாசித்தால் அது ஆயுதம்.

திருச்சியில் ராணுவ விஞ்ஞானி பேச்சு.

புத்தகங்களை தொட்டுப்பார்த்தால் வெறும் காகிதம்தான் ஆனால், அவற்றை தொடர்ந்து வாசித்தால் அது மிகப்பெரிய ஆயும் என்றார் ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு.
அவர் எழுதிய “கையருகே கிரீடம்” என்ற நூல் அறிமுக விழா திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றி அவர் மேலும் பேசியது :
முன்னாள் ஜானாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் நூல்தான் எனது வாழ்க்கையை மாற்றி அமைத்தது. நூல்களை (புத்தகங்களை) வெறுமனே தொட்டுப் பார்த்தால் அவை காகிதமாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை தொடர்ந்து வாசித்தால் (படித்தால்) அது மிகப்பெரிய ஆயுதம் என்பது புரியும் . எனது வரவேற்பறையில் சுமார் 3000 புத்தகங்கள் உள்ளன. இந்த, கையருகே கிரீடம் நூல் 29 புதுமையான தலைப்புகளில் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றார்.

கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் பேசுகையில், டில்லிபாபு அவர்கள் கல்வி, சமுதாயம் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். மேதகு அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தர் போல சிறந்த இளைஞர்களை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு, மாதந்தோறும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இவர் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார் என்றார். முனைவர் ரா. மாது நூலை திறனாய்வு செய்து பேசினார்.

கல்லூரித் தலைவர் பிஎஸ். சந்திரமெüலி, செயலர் முனைவர் கே.மீனா ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி இயக்குநர் எஸ். அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தார். திருச்சி, டால்மியா சிமெண்ட்ஸ் ஆலையின் ஓய்வு பெற்ற இயக்குநர் ந. கோபாலசாமி நூலை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழக பேராசிரியர்கள் துரைசெல்வம், சிவகுமாரன், திருச்சி, நகைச்சுவை மன்ற தலைவர் சிவகுருநாதன், கல்லூரியின் மேலாண்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் என். சேகர் உள்ளிட்ட 16 பேர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் பு. கெஜலெட்சுமி வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. நாகரத்தினம் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்