திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஹோட்டல் ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஹோட்டல் ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி.நகர் கங்கை நகர் பகுதியில் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பிரதீப்ராஜ் (வயது 30). இவர் திருச்சி மன்னார் புரம் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. வேலைக்கு சென்று வந்த அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் பரிதவித்தார்.
இந்நிலையில் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி நித்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் பிரதீப்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார்.