தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உடல் பரிசோதனை முகாம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உடல் பரிசோதனை முகாம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கொண்டாடும் பொருட்டு இன்று (6ந் தேதி) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனருக்கு இலவச உடல் பரிசோதனை முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை ஆட்சியர் சக்திவேல் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் எஸ். சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இளநிலை நிர்வாக அலுவலர், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, மண்டல மையம் திருச்சி மாவட்டம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் ராமலிங்கம் மூலம் திருச்சி மண்டல அலுவலகத்திலும் மத்திய பேருந்து நிலையத்திலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும் ஓட்டுநர் நடத்துனர்களின் உடல்நலம் மேம்படுத்தும் பொருட்டு ராக்ஸ் மருத்துவமனை மதுரை மூலம் சிறப்பு கட்டணமில்லா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், உதவி கிளை மேலாளர் மகேந்திரன், உதவி பொறியாளர் ( பயிற்சி )மற்றும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்