*திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க லுங்கிகள் சிக்கியது*

*திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க லுங்கிகள் சிக்கியது*

துபாயிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதில் திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்சர் (28) என்ற பயணி 1959 கிராம் தங்கத்தை பிளாஸ்கில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோழிக்கோட்டை சேர்ந்த சுகைப் (34) என்பவர் லுங்கியில் தங்கக் கலவையை முக்கி கடத்திக் கொண்டு வந்தார். இவரிடமிருந்து 10 தங்க லுங்கிகள் கைப்பற்றப்பட்டன. தங்கக் கலவையில் லுங்கியை முக்கி பின்னர் அதை காயவைத்து இவ்வாறு நூதன முறையில் கடத்திக் கொண்டு வந்துள்ளார். லுங்கியில் தங்கத்தை கடத்துவது கேரளாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமிருந்தும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்