பாராளுமன்ற பொது தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வாக்காளர் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி!

பாராளுமன்ற பொது தேர்தலில்
நூறு விழுக்காடு வாக்களிக்க
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வாக்காளர் உறுதிமொழி மற்றும்
விழிப்புணர்வு பேரணி!

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் பாராளுமன்ற பொது தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி மற்றும் பேரணி நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பு அலுவலர் வேலுமணி உதவி அலுவலர் மகேந்திரன் செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் பாலசுப்ரமணியன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிளை சேர்மன் ராஜசேகரன் செயலர் ஜவகர் ஹசன் பொருளாளர் இளங்கோவன் ஆலோசகர் எட்மண்ட் வில்லியம் நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன் செயலாற்று குழு உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஸ்ரீரங்கம் பால் குணா லோகநாத் திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் முனைவர் குணசேகரன், மேலாளர் எழில் ஏழுமலை, ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர் இயக்குனர் அபர்ணா முதல்வர் முனைவர் ராஜலட்சுமி முன்னிலையில் கல்லூரி மாணவிகள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட இந்தியக் குடிமகனான நான், நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் கண்ணியத்தையும் நிலை நிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது எந்தத் தூண்டுதலின் தாக்கமும் இல்லாமல் வாக்களிப்போம் என வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி ஏற்றவுடன் கரகாட்ட குழுவினர் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நாட்டியத்துடன் மற்றவர் ரோடு ஆண்டாள் தெரு வழியாக பாராளுமன்ற பொது தேர்தலில் தேர்தலில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்