பல்லாயிரம் கிமீ கடந்து வந்து நெல்லையப்பரை தரிசிக்க குவியும் வெளிநாட்டினர்.

பல்லாயிரம் கிமீ கடந்து வந்து நெல்லையப்பரை தரிசிக்க குவியும் வெளிநாட்டினர்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலின் பெருமைகளை அறிந்து கொள்வதற்காக சமீப காலமாக வெளிநாட்டினர் குவிந்து வருகிறார்கள் இதனிடையே

ஐரோப்பா கண்டத்தில் உள்ள எஸ்டோனியா (Estonia) நாட்டினைச் சேர்ந்த 32 பேர் குழுவாக வந்து நெல்லையப்பர் கோவிலை  நேற்று சுற்றி பார்த்ததோடு அங்கு மூலவரான நெல்லையப்பர் காந்திமதி அம்பாளையும் மனமிருகி வழிபட்டனர் அதன்பின் ஆண்கள் நெற்றியில் திருநீர் பூசியும் மற்றும் பெண்கள் நெற்றில் குங்குமத்தையும் இட்டு வழிபட்டனர்

இதன்பின்னர் நேஷ்னலிஷம் செய்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்ததாவது

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கலாச்சாரம் மொழி பழக்க வழகங்கள் என அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது என்றும்,நெல்லையப்பர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தது மன அமைதியாகவும் உற்சாகத்தையும் அளித்ததாக தெரிவித்தனர்

இந்த கோவிலில் உள்ள வரலாறு கட்டிடக்கலை சிற்பங்கள் என அனைத்தும் வியப்பாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரித்தனர், மேலும் நாங்கள் தமிழ் சித்த மருத்துவமுறை குறித்து தெரிந்துகொள்ளவும் அகஸ்தியர் வழிபாட்டினை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினர்

சிவனின் மீது பற்றினால் எங்கள் நாட்டில் சிவன் கோவில் கட்டிவருவதாகவும் தெரிவித்தனர்

தொடர்ந்து முருகக் கடவுள் மீது அதிகப்பற்று உள்ளதால் தமிழ்நாட்டிலுள்ள முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர்,திருத்தணி,சுவாமிமலை,திருபரங்குன்றம் என முருகன் ஸ்தலங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்ததாகவும் தொடர்ந்து இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்…

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்