காளையார் கோவில் அருகே ஐந்து பேர் வெட்டப்பட்ட  கொடூரம். சந்தி சிரிக்குதா சட்டம் ஒழுங்கு.

காளையார் கோவில் அருகே ஐந்து பேர் வெட்டப்பட்ட  கொடூரம். சந்தி சிரிக்குதா சட்டம் ஒழுங்கு.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில், அருகே கல்லுவழி கிராமத்தில் சவரிமுத்து மகன் சின்னப்பன் வயது என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த கீழ்கண்ட ஐந்து நபர்களையும் இன்று (26.01.2024) சுமார் அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி விட்டு சென்றுவிட்டனர் என விசாரணையில் தெரியவருகிறது.

1.சவரிமுத்து மகன்
சின்னப்பன் (70/24)
2.உபகார மேரி க/பெ
சின்னப்பன் (60/24)
3.வேத போதக அரசி கணவர் பெயர் ஜேக்கப் (35/24)
4.ஜெர்லின் த/பெ ஜேக்கப் (12/24)
5.ஜோபின் த/பெ ஜேக்கப் (8/24).

மேற்படி வெட்டுப்பட்ட  நபர்கள் ஐந்து பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான் நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காளையார்கோவில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்