புரத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலை பள்ளியின் வைரவிழா கொண்டாட்டம். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் பங்கேற்பு.
புரத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலை பள்ளியின் வைரவிழா கொண்டாட்டம். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் பங்கேற்பு
1950 ஆம் ஆண்டு முதல் கல்விப்பணியில் மிகப்பெரும் தொண்டாற்றிவரும் புரத்தாக்குடி புனித சவேரியார் மேல்நிலை பள்ளியின் வைரவிழா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும், புனித சவேரியாரின் திருவிழாவை கொண்டாடும் விதமாகவும் பள்ளி மாணவ மாணவியரோடு சிறப்பு விழா நடந்தது .
இவ்விழாவிற்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் . அருட்தந்தை . ராபர்ட் செல்வன் , முன்னாள் மாணவரும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத்துறையின் முதன்மை துணைத்தலைவருமான பொறியாளர் . அ.பேட்ரிக் ராஜ்குமாரை தலைமை விருந்தினாராகவும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுதாஹிரை சிறப்பு விருந்தினராகவும் அழைத்து கவுரப்படுத்தினார்கள். விழாவில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் சுய ஒழுக்கத்தின் அவசியம் ஆகியவை பற்றி சிறப்புரையினை இன்ஜினியர் பேட்ரிக்ராஜ்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.