வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி , இலவச தலைக்கவசம். சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்.
வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி , இலவச தலைக்கவசம். சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மலைக்கோட்டை பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசர் மற்றும்உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய காவல் அதிகாரிகள் முன்னிலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.எம். கோபால், தலைவர் நந்தா சரவணன் , கௌரவத் தலைவர் பஜார் மைதீன் , செயலாளர் குடமுருட்டி புஷ்பராஜ் , பொருளாளர் திருச்சி ஜி.நாகு , இளைஞர் அணி தலைவர் மலைக்கோட்டை கார்த்தி, மாவட்ட பொறுப்பாளர் பவித்ரன் ,மற்றும் நிர்வாகிகள் ஜிம் விக்கி, அர்ஜுன், இர்பான், பஜார் சாகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் 49 பேருக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.