போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலை சுற்ற வைக்கும் வியாபாரியின் புகார்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலை சுற்ற வைக்கும் வியாபாரியின் புகார்.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்
கோவில் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இயேசு வடியான் நாடார் (வயது 83) வியாபாரியான இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் எனது சக்தி நகரில் உள்ள இரண்டு வீடுகளை அடமானமாக வைத்து வங்கியில் ரூ.1 கோடியே 15 லட்சம் கடன் பெற்றேன். பின்னர் கடன் தொகையை செலுத்தாத காரணத்தினால் வட்டியுடன் சேர்த்து இரண்டு வீடுகளும் ஏலத்திற்கு வந்துவிட்டது. இந்த கடனை செலுத்துவதற்காக ஒருவர் மூலமாக இன்னொருவரிடம் வட்டிக்கு பணம் கேட்டேன். பின்னர் எனக்கு சொந்தமான நொச்சியம் பகுதியில் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் 44 சென்ட் நிலத்தினை பவர் கொடுத்து ரூ. 92 லட்சம் பெற்றேன்.
ஆனால் அவர்கள் மொத்த சொத்தையும் அபகரிக்க முயன்றதால் பவரை ரத்து செய்துவிட்டு வேறு நபர்களுக்கு விலை பேசி பணம் வாங்கி வங்கி கடனை அடைத்தேன்.
பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரூ.92 லட்சம் பணத்திற்கு உண்டான வட்டியுடன் திரும்ப செலுத்துவதாக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நான் தெரிவித்த நிலையில், வேறு நபர்களுக்கு கொடுத்த அந்த நிலத்தில்
காவல்துறை உதவியுடன் 5 பேர் அத்துமீறி நுழைந்து பொக்லைன் மூலம் மனை பிரிவுகளை நாசப்படுத்தி விட்டார்கள்.
நான் தட்டி கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.