சுகாதார சீர்கேட்டை கண்டித்து, பாஜகவினர் சங்கு ஊதி போராட்டம் முற்றுகை.

சுகாதார சீர்கேட்டை கண்டித்து, பாஜகவினர் சங்கு ஊதி போராட்டம் முற்றுகை.

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மந்தகதியில் நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மஞ்சள் காமாலை, டைபாய்டு காலரா வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு திருச்சி மாநகர மக்கள் ஆளாகி வருகின்றனர்.

மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் சுத்தமான குடிநீர் வழங்க கூட முடியாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் சங்கினை பறித்து பாஜகவினரை அப்புறப்படுத்தி கைது செய்ய முற்பட்டதால், ஆத்திரமடைந்த பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அப்போது போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்களுடன் ஆன போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்