அகில இந்திய ஹாக்கி போட்டி – சென்னை ,பெங்களூர், டெல்லி அணிகள் வெற்றி.

அகில இந்திய ஹாக்கி போட்டி – சென்னை ,பெங்களூர், டெல்லி அணிகள் வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில்
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்மூன்றாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

2வது நாளான நேற்று  நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணியும், கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணியும் மோதின.இதில் 2 – 1 என்ற கோல் கணக்கில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வெற்றிப் பெற்றது.

2வது போட்டியில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியுடன் சென்னை ஜி எஸ் டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி மோதியது.

இதில் 4 – 1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்றது.

3வது போட்டியில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதின.

இதில் 2 – 1என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி சென்ட்ரல் செக்ரிட்டேட் அணி வெற்றிப் பெற்றது.

4வது போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின.

இதில் 5 – 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றிப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்