அதிமுக குடும்பம் போன்றது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு விரைவில் தீர்வு. திருச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி.

அதிமுக குடும்பம் போன்றது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு விரைவில் தீர்வு. திருச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மாநகர் புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு,,அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய உள்ளடக்கிய திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்கத்திற்கான
தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக அதிமுக தலைமை சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. அந்த வகையில் திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள அம்மா மாளிகையில் விருப்பமனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டு விருப்பமனுக்களை பெற்றார். மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன், தாமரை ராஜேந்திரன்,தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன் முன்னாள் அமைச்சர்கள் ,சிவபதி ,அண்ணாவி,போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ரத்தினம், தென் மண்டல செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்கமணி கூறியதாவது:-

தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. அதிமுகவில்
நிலவும் உட்கட்சி பூசல் விவகாரம் பொதுச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிமுக என்பது ஒரு குடும்பம். கட்டுக்கோப்பான இயக்கம்.
பொதுச் செயலாளர் அனைவரிடத்திலும் அரவணைத்து பேசி ஒரு குடும்பத்தில் நிலவும் பிரச்சனையை பேசி தீர்ப்பது போல
அதிமுக நிலவும் உட்கட்சி பூசலையும் பேசித் தீர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில்  எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் வனிதா,
திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு. அம்பிகாபதி,பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, என்.எஸ்.பூபதி புத்தூர் ராஜேந்திரன், ரோஜர் ஏர்போர்ட் விஜி , நாகநாதர் பாண்டி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கலிலுல் ரஹ்மான்,
வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ்,முத்துமாரி ,சசிகுமார் ஜெயராமன், தினேஷ் பாபு,
உறையூர் சாதிக்,ரமணி லால், உறந்தை மணிமொழியன்,பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ் பாலக்கரை , இன்ஜினியர் ரமேஷ் நாட் ஸ் சொக்கலிங்கம், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் சூரியூர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் எஸ். கே.டி.கார்த்திக், ராவணன், இளைஞர் அணி சண்முக பிரபாகரன்,
லால்குடி எஸ்.எஸ். விக்னேஷ்
வடக்கு மாவட்ட பொருளாளர் சேவியர்,வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன்,
பேரவை செயலாளர் ஐயம்பாளையம் ரமேஷ்,மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், எம்ஜிஆர் மன்றம் அறிவழகன் விஜய்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி. முத்துக்கருப்பன், ஜெயக்குமார்
வக்கீல் வெங்கடேசன்,
நவலூர் குட்டப்பட்டு
முத்துக்குமார், பாகனூர் மணிகண்டன், மட்டப்பாறை மகேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் ,தொழிற்சங்க நிர்வாகிகள் அவை நேசன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்