திருவானைக்கோவில் அடிமனை பிரச்சனையில் தீர்வு காண நடவடிக்கை. மாவட்ட கலெக்டர் இடம் பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு.

திருவானைக்கோவில் அடிமனை பிரச்சனையில் தீர்வு காண நடவடிக்கை. மாவட்ட கலெக்டர் இடம் பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு.

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி திருவானைக் கோவில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ஆணையர்/செயல் அலுவலரால் கடந்த 25.09.2023 ம் தேதியன்று ந.க.எண்.234/1433/அ4 என்ற செயல் முறை ஆணையை திருவரங்கம் சார்பதிவாளருக்கு அனுப்பியுள்ளார். அதில் “மேற்காணும் விபரப்படியுள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான 1930 ஆம் ஆண்டில் ரீசெட்டில்மெண்ட் பைசலாதி ரிஜிஸ்டர்படியும், வெள்ளித்திருமுத்தம் கிராம கணக்கிலிருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்டு வார்டு, பிளாக், டவுன் சர்வே எண்கள் பலவாறாக உட்பிரிவு செய்யப்பட்டு, சில இடங்கள் பட்டா மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கண்டறியப்பட்ட வருவாய்த்துறையின் மூல ஆவணங்கள் படி மேற்காணும் சர்வே எண்களில் உள்ள சொத்துக்கள் யாவும் இத்திருக்கோலிலுக்கு சொந்தமானவை என்பதால் புல எண்கள் மற்றும் அதனுள் உட்பிரிவு செய்யப்பட்டு, புதியதாக புல எண்கள் வழங்கப்பட்ட எந்தவொரு புல எண்ணுக்குரிய சொத்துக்களையும் பத்திரப்பதிவு செய்ய வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் நாங்கள் சுயமாக சம்பாதித்து கிரையம் பெற்ற சொத்தினை எங்களுடைய வாரிசுதாரர்களின் பெயர்களுக்கு மாற்றம் செய்யமுடியாமலும், கிரையம் கொடுக்க முடியாமலும், கிரையம் பெற முடியாமலும், எங்களது குழந்தைகளின் கல்வி கடன்கள் பெற முடியாமலும் மற்றும் அவர்களது திருமணங்களுக்காக செலவிட பத்திரங்களை அடமானம் வைத்து கடன்கள் பெற முடியாமலும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம். மேலும், நாங்கள் எங்கள் சொத்து சம்பந்தமாக கிரையம் பெற்ற நாளிலிருந்து அரசுக்கு உண்டான வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, மற்றும் தொழில் வரி, மின்சார கட்டணங்களை முறையாக செலுத்தி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென்று மேற்சொன்ன ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் உதவி
ஆணையர்/செயல் அலுவலர் செயல் முறை ஆணையினை எந்த உத்தரவின் அடிப்படையில் பிறப்பித்துள்ளார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்.இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து தீர்வு கிடைக்க ஓர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி முடிவெடுத்த உண்ணாவிரத போராட்டத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.எனவே இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் என்பதை இந்த மனுவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்