ஏபிவிபி புதிய நிர்வாகிகள் தேர்வு.
ஏபிவிபி புதிய நிர்வாகிகள் தேர்வு.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் அமைப்பான அகில பாரதீய பரிஷத் (ஏபிவிபி) சிறப்புக் கூட்டம் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். மத்திய செயலாக்கக்குழு உறுப்பினர் சுசீலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப்பேசினார். மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன், மாநில ஆராய்ச்சியாளர்களுக்கான பொறுப்பாளர் மதன் உள்ளிட்டோர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து திருச்சி,லால்குடி,முசிறி ஆகிய பகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
திருச்சி மாநகர தலைவராக மருத்துவர் அருண்பிரகாஷ், செயலாளராக ஸ்ரீராம், லால்குடி நகர செயலாளராக மாசிலா, முசிறி நகர தலைவராக ஆசிரியை சரோஜினி, செயலாளராக வீரப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களுக்கு சக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் மத்திய, மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.