போலிசாருக்கு திறனாய்வு போட்டி. நூண்ணறிவு பிரிவு உதவி ஆணையருக்கு போலிஸ் கமிஷ்னர் காமினி பாராட்டு.
போலிசாருக்கு திறனாய்வு போட்டி. நூண்ணறிவு பிரிவு உதவி ஆணையருக்கு போலிஸ் கமிஷ்னர் காமினி பாராட்டு.

காவல்துறையினருக்கு மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்தில் 5 நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர. இதில் கமுதியை சேர்ந்த கனகராஜ், போஸ் ஆகிய இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் கொலை செய்ததை தடய அறிவியல் நுட்பம் மூலம் புலனாய்வு செய்து கோர்ட்டில் நிரூபணம் செய்தும், சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு 48 வருடம் சிறை தண்டனை பெற்றுத்தந்த இப்போதைய திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஸ்ரீதர் கோப்பை மற்றும் பணி பாராட்டு சான்றிதழ் வென்றார். அவரை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பாராட்டினார்.
அதேபோல் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மாநில அளவில் தடய அறிவியல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் தடய மருத்துவவியலில் வெண்கலப பதக்கம் என மொத்தம் ரெண்டு பதக்கங்களை வென்றார். அவரையும் போலீஸ் கமிஷனர் காமினி பாராட்டினார்.