ஆம்பூரில் தங்கமுலாம் பூசப்பட்ட மோதிரங்களை அடகு வைத்து ஏமாற்றிய பெண் கைது.

ஆம்பூரில் தங்கமுலாம் பூசப்பட்ட மோதிரங்களை அடகு வைத்து ஏமாற்றிய பெண் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நகைகடையில், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த கொத்தபள்ளி பகுதியை சேர்ந்த அமுதா என்ற பெண் 2 கிராம் மோதிரத்தை அடகு வைத்துள்ளார். பின்னர், நகை கடை உரிமையாளர் அந்த மோதிரத்தை ஆய்வு செய்து பார்த்த போது, அது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகையென தெரியவந்தது.

இதுகுறித்து அடகுகடை உரிமையாளர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அமுதா என்ற பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல் 4 கடைகளில் நான்கு தங்கமுலாம் பூசப்பட்ட 2 கிராம மோதிரத்தை பெண் அடகுவைத்து ஏமாற்றிய சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்