திருப்பத்தூர் மாவட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்த போராட்ட அறிவிப்பு.
திருப்பத்தூர் மாவட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்த போராட்ட அறிவிப்பு.
திருப்பத்தூர் மாவட்ட முழுவதும் ஏராளமான கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணைகளில் தேங்காய் மஞ்சு, மருந்து, மின்சாரம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலையும், கூலி உயர்வு, பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து கறிக்கோழி உற்பத்தி விலையை உயர்த்தி தரக்கோரி தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் அணி சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் நாட்றம்பள்ளி புத்துக்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கறிக்கோழி உற்பத்தி கூலி கிலோ ₹6.50 ரூபாயில் இருந்து பண்ணை கோழி ₹20, ரூபாய் நாட்டுக்கோழி ₹25 ரூபாய், காடை ஒன்றுக்கு ₹7 ரூபாய் உற்பத்தி கூலியாக உயர்த்தி கொடுக்க வேண்டும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கோழி உற்பத்தியை நிறுத்துவது, புதிதாக கோழிக்குஞ்சுகளை பண்ணைகளுக்கு இறக்குவதை நிறுத்துவது என்று ஒரு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மூலப் பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது ஆனால் உற்பத்திக் கூலி மட்டும் இன்னும் ₹6.50 ரூபாயாக உள்ளது.
அந்த பணமும் விவசாயிகளுக்கு முழுவதுமாக கிடைப்பதில்லை, பல்வேறு காரணங்களை சொல்லி அந்த விலையையும் மிகக் குறைவாக வழங்குகின்றனர். மேலும் ஏற்படும் இழப்புகளுக்கும் கோழிப்பண்ணை உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையாக உள்ளது, கோழிகள் இறந்தாலும் உற்பத்தியாளர்களே பொறுப்பு எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது.
இதனால் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வது என்று சங்கத்தின் கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் அணி சார்பாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் லட்சுமணன், பொருளாளர் மகேந்திரன், நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் வேணுகோபால், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் நாகபூஷணம், ராமமூர்த்தி, நாராயணசாமி, ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், பூபதி, முருகன், மகேஷ், விவேகானந்தன், முரளி, பழனி உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.