வாக்காளர் திருத்தச் சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆம்பூர்  ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

வாக்காளர் திருத்தச் சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆம்பூர்  ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வாக்காளர் சிறப்பு திருதத்தை கண்டித்தும் அதனை வாபஸ் பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், த.மு.மு.க, AIMIM, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர், வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும், இதனை கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையையும், மத்திய அரசையும் கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பி ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டகாரர்கள் அத்துமீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் காவல்
துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் முன்கூட்டியே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்