போகும் இடம் எல்லாம் தொடர் புகார் எதிரொலி. இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி மாற்றம்.

போகும் இடம் எல்லாம் தொடர் புகார் எதிரொலி. இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி மாற்றம்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் அக்பர் அலி. பணியில் சேர்ந்த நாள் முதலே பொது மக்களிடம் மிகவும் கடினமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்கள் அழைக்கழித்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனையடைந்து வந்தனர். இதனால் இவர் பணியில் சேர்ந்த நாள் முதலே பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து அதிக அளவில் குற்றம் சாட்டுக்கள் அடங்கிய புகார்கள் தமிழக அரசுக்கு சென்றவண்ணம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த அக்பர் அலியை நிர்வாக நலன் கருதி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்து அதிரடி உத்தரவிட்டது. இந்த பணிமாறுதலையடுத்து பொதுநல அமைப்புகள் அரசியல் கட்சியினர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இவர் இதற்க்கு முன்பு தாசில்தார், உதவி ஆணையர் என்று திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் பணிபுரிந்த போதும் பொதுமக்கள் தொடர் புகாரால் தூக்கியடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்