உழவர் பேரியக்க மாநாடு குறித்து ஆலோசனை. திருச்சி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்.

உழவர் பேரியக்க மாநாடு குறித்து ஆலோசனை. திருச்சி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு உழவர் பேரியக்க பொதுக்குழு கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் க.உமாநாத் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி சிறப்புரை ஆற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர் திலிப்குமார் வரவேற்று பேசினார், புறநகர் மாவட்ட செயலாளர் கருணாநிதி, மேற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வருகின்ற 21-ந்தேதி பாமக நிறுவனர் இராமதாஸ் , கட்சியின் தலைவர் அன்பு மணி இராமதாஸ் ஆகியோர் கலந்துக்கொள்ளும் திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கு திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது 5ஆயிரத்துக்கு மேல் மாநாட்டில் திரளாக கலந்துக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், மகளிரும் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர். முடிவில் ஜங்ஷன் பகுதி செயலாளர் ரா.பாஸ்கர் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்