2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடவேண்டும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடவேண்டும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட இணைச்செயலாளர் இந்திரா காந்தி, மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சின்னசாமி மற்றும்இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ,மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன், மீனவரணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன்,இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் தேவா, புங்கனூர் கார்த்திக்,ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், ஆதாளி, மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட முழுவதும் பூத் கமிட்டி கிளைகள் அமைப்பது, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.