அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக வினர் திமுகவில் இணைந்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக வினர் திமுகவில் இணைந்தனர்.

  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில், அதிமுக  வட்டகழகப் பொருளாளர் துரை, தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.மு.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில்  அக்கட்சிகளில் இருந்து விலகி  திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதேபோல் திருச்சி மாநகரம் காட்டூர் பகுதி மற்றும் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கவில் தங்களை இனைத்துக் கொண்டனர்.

  இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், ஒன்றிய கழகச் செயலாளர் பழனியாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்