தமிழக முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மின் ஊழியர்கள் 25-ந் தேதி கறுப்பு தின ஆர்ப்பாட்டம்.
தமிழக முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மின் ஊழியர்கள் 25-ந் தேதி கறுப்பு தின ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடுமின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில அளவிலான கூட்டம். திருச்சியில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு இந்திய நாடு முழுவதும் அரசு நிறுவனங்களாக இருக்கும். மின்வாரியங்களை சிறு சிறு கம்பெனிகளாக பிரித்து தனியாரிடம் ஒப்படைக்கும் நடைவடிக்கை அந்தந்த மாநிலங்களில் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை மறுபரிசீலனை குறிப்பாக மே.வங்கம். தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ளதை மறுபரீசிலனை செய்திட வலியுறுத்தியும் , மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரியும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துவது கைவிடக் கோரியும், ஒப்பந்த ஊழியர்கள் அடையாளம் கண்டு தினக்கூலி வழங்குவதோடு பண்டிகை கால போனஸ் அவர்களுக்கும் வழங்கிட கேட்டு கண்டன ஆர்பாட்டம் அகில இந்திய அளவில் நடத்தப்படும். 25.10.24 அன்று தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் வரவேற்புரையாற்றினார். மத்திய அமைப்பின். மாநில பொதுச்செயலாளர். அறிக்கையை முன்மொழிந்தார். வரவு செலவு அறிக்கை மாநில பொருளாளர் வெங்கடேசன் முன்வைத்தார்.. தீர்மானங்களை துணை பொதுச் செயலாளர்கள் ரவிசந்திரன், பழனிவேல் முன்மொழிந்தார்கள். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் நிறை உரையாற்றினார். இறுதியாக வட்ட செயலாளர். பழனியாண்டி நன்றி கூறினார்.