திருச்சி ரயில் நிலையம் அருகே இளைஞர் மர்மச்சாவு.

திருச்சி ரயில் நிலையம் அருகே
இளைஞர் மர்மச்சாவு.

திருச்சி ரயில்வே நிலைய எல்லைக்கு உள்பட்ட குட்செட் மேம்பாலம் அருகே உள்ள மரத்தில், ஆண் ஒருவர் தூக்கில் தொங்குவதாக ரயில்வே போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. ஜங்ஷன் ரயில் நிலைய ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் வலது கையில் தெலுங்கில், அனுராதா அம்மா என்று பச்சை குத்தியுள்ளார். மற்றபடி அவர் யார், எந்த ஊர், தற்கொலை செய்தாரா, அல்லது யாரேனும் அவரை தூக்கில் தொங்க விட்டனரா, எப்படி இறந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்தவர் குறித்த தகவல் தெரிந்தால் 94981 82025 என்ற செல்லிடப்பேசியில் விவரம் தெரிவிக்கலாம் என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்