விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு.
விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு.
விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி இன்று விமான மூலம் அந்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் புறப்பட ஆயத்தம் ஆகினர்..இது பற்றி தகவல் அறிந்த ஈரோடு மாநகர போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீடு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டனர். பின்னர் அவரை வெளியில் செல்ல முடியாதபடி தடுத்து வீட்டில் சிறை வைத்தனர். இது பற்றி அய்யாக்கண்ணு கூறும்போது,
ஜனநாயகத்தில் போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.